மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சகாயம் தலைமையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை: உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு



Apr 17, 2017

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக முன்னர் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75நாட்கள் சிகிச்சைக்குப் பின் கடந்த டிசம்பர் 5ம் தேதி மாரடைப்பினால் மரணமடைந்தார்.

Siragu madras-high-court

பொதுமக்கள் மற்றும் தொண்டர்களும் இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக நம்புகின்றனர். ஜெ., மரணத்தில் நீதி விசாரணை தேவை என்று ஓ.பி.எஸ் அணி தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலமுருகன், ஜெயலலிதா மரணம் குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை நடத்தவேண்டும் என்று வழக்கு பதிவு செய்தார்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமயிலான அமர்வு முன்பு விசாரணை செய்யப்பட்ட பின் தேதி குறிப்பிடாமல் இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சகாயம் தலைமையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை: உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு”

அதிகம் படித்தது