மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சக்திகாந்த தாஸ்: ரூ.1000 நோட்டுகளை அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை



Feb 22, 2017

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். தொடர்ந்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

siragu-sakthi-kandhadoss

புதிய 1000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

1000 ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை. இன்னமும் ஏ.டி.எம்-களில் பணத்தட்டுப்பாடு ஏற்படுவதாக புகார் வந்துள்ளது. எனவே ரூ.500 உள்ளிட்ட குறைந்த மதிப்புடைய நோட்டுகளை அதிக அளவு அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடுவதற்கான பணி நடைபெற்று வருகிறது. மேலும் தேவையான பணத்தை மட்டும் ஏ.டி.எம்-களில் இருந்து எடுக்குமாறு நாட்டில் உள்ள அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சக்திகாந்த தாஸ்: ரூ.1000 நோட்டுகளை அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை”

அதிகம் படித்தது