மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சசிகலா இன்று(15.02.17) மாலை பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய உள்ளார்



Feb 15, 2017

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டு சிறைதண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.

Siragu sasikalaa5

இதையடுத்து சரணடைய நான்கு வார அவகாசம் தேவை என்று உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார் சசிகலா. இந்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று காலை 11.45 மணிக்கு போயஸ் கார்டனிலிருந்து பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய புறப்பட்டார் சசிகலா. போயஸ் கார்டனிலிருந்து புறப்பட்ட சசிகலா ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்திலும் அஞ்சலி செலுத்தினார்.

இதன்பிறகு சரணடைய பெங்களூர் புறப்பட்டார் சசிகலா. ஒரு காரில் சசிகலாவும், இளவரசியும் செல்கிறார்கள். வேறு ஒரு காரில் சுதாகரனும் செல்கிறார்கள்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சசிகலா இன்று(15.02.17) மாலை பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய உள்ளார்”

அதிகம் படித்தது