மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சசிகலா, முதல்வர் பதவி ஏற்க தடை விதித்து வழக்கு



Feb 6, 2017

ஜெயலலிதா மறைவிற்குப் பின் சசிகலா அதிமுக-வின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சட்டசபை குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் சசிகலா.

siragu-supreme-court

இதனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டு, தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சசிகலா வரும் 9ம் தேதிக்குள் முதல்வர் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதையடுத்து சட்டபஞ்சாயத்து இயக்கம் உச்சநீதிமன்றத்தில், சசிகலா முதல்வர் பதவியேற்க தடை விதித்து வழக்கு தொடர்ந்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உட்பட்டோர் விடுதலை செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு ஒரு வாரத்தில் வரும் நிலையில் உள்ளதால் சசிகலா முதல்வர் பதவியை ஏற்க தடை விதிக்குமாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சசிகலா, முதல்வர் பதவி ஏற்க தடை விதித்து வழக்கு”

அதிகம் படித்தது