மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சட்டசபையில் தாக்கப்பட்டது தொடர்பாக திமுக உண்ணாவிரதப் போராட்டம்



Feb 22, 2017

பிப்ரவரி 18ம் தேதி தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபித்தார். அன்றைய சட்டசபை கூட்டத்தில் திமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் சபாநாயகர் மறுத்து விட்டார்.

Siragu Stalin strike

இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது, கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எனவே திமுக உறுப்பினர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டார் சபாநாயகர். ஆனால் திமுக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே அவர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

சட்டசபையில் நடைபெற்ற நிகழ்வுகளை கண்டித்து 22ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில் இன்று(22.02.17)திமுக சார்பில் தமிழக மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காலை 9 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியது. திருச்சியில் ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரத்தில் எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் அந்தந்த மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உண்ணாவிரதத்தை தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள். காலை 9 மணிக்கு துவங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சட்டசபையில் தாக்கப்பட்டது தொடர்பாக திமுக உண்ணாவிரதப் போராட்டம்”

அதிகம் படித்தது