மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சட்டமன்றத்தில் கடும் அமளி: 3 மணி வரை ஒத்திவைப்பு



Feb 18, 2017

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபை இன்று காலை 11.00 மணியளவில் கூடியது. இதில் 230எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்றனர்.

Siragu assembly1

சட்டசபை கூடியதற்கான காரணத்தை கூறினார் சபாநாயகர் தனபால். தொடர்ந்து ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தி.மு.க மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதனை மறுத்தார் சபாநாயகர்.

இதனையடுத்து சட்டமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. நாற்காலி மேசை போன்றவற்றை சேதப்படுத்தினர். ஒரு சில எம்.எல்.ஏ-க்கள் மேசை மீது ஏறி நின்றும், பேப்பரை கிழித்தும் முழக்கமிட்டனர். இதையடுத்து சபாநாயகர் 1 மணி வரை ஒத்திவைத்தார்.

மீண்டும் 1 மணிக்கு கூடிய சட்டசபையில் மீண்டும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதையடுத்து திமுக உறுப்பினர்களை வெளியேற உத்தரவிட்டார் சபாநாயகர். பின் 3 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சட்டமன்றத்தில் கடும் அமளி: 3 மணி வரை ஒத்திவைப்பு”

அதிகம் படித்தது