மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சட்டவிரோத பணபரிமாற்றம்: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை



Apr 10, 2017

இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பாக புகார்கள் எழுந்ததின் பேரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலைக் கழக துணை வேந்தர் கீதா லெட்சுமி ஆகியோரின் வீடுகளில் சோதனை செய்யப்பட்டது.

Siragu Minister-Vijaya-Bhaskar

இச்சோதனையில் சட்டவிரோதமாக பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின. இதனையடுத்து ஆர்கே நகர் தொகுதியின் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மேலும் விஜயபாஸ்கர், சரத்குமார், கீழா லெட்சுமி போன்றோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இன்று(10.04.17)சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜரானார். இவரிடம் ஐந்து மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இவ்விசாரணையை அடுத்து விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.இவரைத் தொடர்ந்து நடிகர் சரத்குமாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சட்டவிரோத பணபரிமாற்றம்: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை”

அதிகம் படித்தது