மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சட்ட விரோத பணபரிமாற்றம் செய்த தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்கு



May 2, 2017

அதிமுக-வின் இரட்டை இலை சின்னம் தனக்குத்தான் வேண்டும் என்று ஓ.பி. எஸ் அணி மற்றும் இ.பி.எஸ் அணியும் போட்டியிட்டதால் அச்சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்.

Siragu dinakaran1

இரட்டை இலை சின்னத்தைப் பெற ஐம்பது கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக கடந்த 17ம் தேதி டெல்லியில் சுகேஷ் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1.30லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சுகேஷ் அளித்த தகவலின்படி டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்டு 15 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை ஹவாலா இடைத்தரகர் நரேஷ், டிடிவி தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா போன்ற இரண்டு பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சட்ட விரோத பணபரிமாற்றம் செய்த தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்கு”

அதிகம் படித்தது