மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் சேகர் ரெட்டி கைது



Dec 21, 2016

வருமான வரித்துறைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தியபோது, ரூ.10,000 கோடிக்கும் அதிகமான தமிழக அரசின் ஒப்பந்தங்கள் சேகர் ரெட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ரூ.171கோடி ரொக்கமும், 138 கிலோ தங்கமும் சிக்கியது. கைப்பற்றப்பட்ட ரொக்கத்தில் ரூ. 30 கோடிக்கு புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களாக இருந்தன.

siragu-sekhar-reddi

சி.பி.ஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சேகர் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்தனர். அவரது நண்பர்களிடமும் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் விசாரணை முடிவில் சேகர் ரெட்டியும் அவரது நண்பர் சீனிவாசலுவும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜனவரி 3ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேகர் ரெட்டி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ராம மோகன் ராவ் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இதில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் சேகர் ரெட்டி கைது”

அதிகம் படித்தது