மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம்



Mar 7, 2017

தனிமனிதர் அடையாள எண் எனப்படும் ஆதார் எண் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. முதலில் அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் எண் அவசியமில்லை என்று கூறப்பட்டிருந்தது.

siragu-gas-cylinders

ஆனால் தற்போது பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை பதிய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று அறிவித்திருந்தது.

மேலும் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவதற்கும் ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் பெரும் நிறுவனங்களில் ஆதார் எண்ணை மே 31க்குள் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம்”

அதிகம் படித்தது