மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு



Feb 2, 2017

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதம் தோறும் மாற்றப்பட்டு வருகிறது. அவ்வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.66.50 அதிகரித்துள்ளது.

siragu-gas-cylinders

ஜனவரி மாதம் சென்னையில் வீட்டு சிலிண்டரின் விலை ரூ. 594.50 என்று விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை மாற்றத்திற்குப் பின் ரூ.661 ஆக உயர்ந்துள்ளது. சென்ற மாதம் வணிக பயன்பாட்டுக்காக 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.1233.50க்கு விற்பனையானது. இந்த சிலிண்டர் தற்போது ரூ. 104.50 அதிகரிக்கப்பட்டு ரூ. 1338 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதால், கடந்த இரண்டு மாதங்களாக எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரித்து வருகிறது என்று எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு”

அதிகம் படித்தது