மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை உயர்நீதிமன்றம்: கடலோர மாவட்டங்களில் தாது மணல் எடுக்க தடை நீடிப்பு



Mar 27, 2017

2013ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து, கடலோர மாவட்டங்களில் தாதுமணல் எடுப்பது தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு இன்று(27.03.17) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

Siragu sand

இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. அதில் கடலோர மாவட்டங்களில் தாதுமணல் சட்ட விரோதமாக எடுக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்ற தடை உத்தரவிற்கு முன் எடுக்கப்பட்ட மணல் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதன் பிறகு மத்திய மாநில அரசுகளின் அனுமதி பெற்று ஏற்றுமதி செய்கிறோம் என்று ஆற்றுமணல் உரிமையாளர்கள் சார்பில் கூறப்பட்டது.

தமிழகம் முழுவதிலும் உள்ள கடலோர மாவட்டங்களில் உள்ள தாது மணலை எடுக்க தடை உத்தரவை நீடித்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் தாது மணலை சட்டவிரோதமாக எடுப்பதை தடுக்க தனி குழு அமைக்க வேண்டும், அதில் மத்திய மாநில அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை உயர்நீதிமன்றம்: கடலோர மாவட்டங்களில் தாது மணல் எடுக்க தடை நீடிப்பு”

அதிகம் படித்தது