மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை உயர்நீதிமன்றம் தமிழக உள்ளாட்சித் தேர்தல் வழக்கை ஜனவரி இறுதிக்கு ஒத்திவைத்தது



Dec 7, 2016

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் முறையாக இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதி கிருபாகரன் தேர்தலை ரத்து செய்தும், மாநில தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் உத்தரவிட்டார்.

siragu-chennai-highcourt

மேலும் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு டிசம்பர் மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்தது.

இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் ஜூலுவாடி ஜி.ரமேஷ், பார்த்திபன் அடங்கிய குழு பொங்கல் விடுமுறைக்குப் பின் விசாரணை நடத்தப்படும் எனக்கூறி ஜனவரி இறுதிக்கு ஒத்திவைத்தனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை உயர்நீதிமன்றம் தமிழக உள்ளாட்சித் தேர்தல் வழக்கை ஜனவரி இறுதிக்கு ஒத்திவைத்தது”

அதிகம் படித்தது