மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை உயர்நீதிமன்றம்: மதுக்கடைக்கு எதிராகப் போராடி கைதான 21 பேர் விடுதலை



May 5, 2017

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் உள்ள மதுக்கடைகளை மூடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் உள்ள 3500மதுக்கடைகள் மூடப்பட்டது.

Siragu-madras-high-court

மதுக்கடைகள் மூலமாக அதிகமாக வருமானம் ஈட்டிய தமிழக அரசு, நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை கிராமத்தில் திறப்பதற்கு ஏற்பாடு செய்தது. ஆனால் கிராமத்தில் மதுக்கடைகளை திறப்பதற்கு ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்பியது. இதற்காகப் போராட்டம் நடத்திய 21 பேரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பிரசன்னா என்பவரின் தாயார் இறந்து விட்டதால், அவரின் இறுதிச் சடங்குக்கு செல்ல அனுமதிக்கக் கோரி அவர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்தவழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில், மதுக்கடைகளுக்கு எதிராக அமைதியாகபோராட்டம் நடத்துவது குற்றமா? அவர்களை கைது செய்தது ஏன்? என்று கேள்விகள் எழுப்பப்பட்டது.

இந்நிலையில் இன்றைய இவ்வழக்கின் விசாரணையில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பிரசன்னா உள்ளிட்ட 21பேரையும் விடுதலை செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை உயர்நீதிமன்றம்: மதுக்கடைக்கு எதிராகப் போராடி கைதான 21 பேர் விடுதலை”

அதிகம் படித்தது