மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை எண்ணூரில் மீண்டும் எண்ணெய் அகற்றும் பணி துவக்கம்



Feb 21, 2017

எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் கடந்த மாதம் 28ம் தேதியன்று இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டன. இதில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் சேதமடைந்ததால் எண்ணெய் கடலில் கொட்டியது.

Siragu oil

இதன் காரணமாக எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை எண்ணெய் படலம் பரவியது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் செத்து மிதந்தன. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

எண்ணெய் அகற்றும் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்து நாட்களுக்கும் மேலாக ஈடுபட்டனர். எண்ணெய் படலம் முற்றிலுமாக அகற்றப்பட்டது என்று அரசு அறிவித்தது.

இந்நிலையில் கடலூர் மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் எண்ணெய் மிதந்தது. அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எண்ணெய் படலத்தை நீக்குமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் எண்ணூர் பாறைகளில் படிந்திருக்கும் எண்ணெய் படலத்தை அகற்றும் பணி இன்று துவங்கியது. எண்ணெய் படந்த பாறைகளில் சுடுநீர் ஊற்றி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை எண்ணூரில் மீண்டும் எண்ணெய் அகற்றும் பணி துவக்கம்”

அதிகம் படித்தது