மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை கலவரம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை துவங்கியது



Feb 9, 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் இறுதியில் கலவரம் ஏற்பட்டது. இதில் குடிசைகள் மற்றும் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டது.

Siragu Jallikattu_struggle4

இக்கலவரம் தொடர்பாக       விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இக்குழுவின் விசாரணை இன்று துவங்கியது. மெரினா கடற்கரை அருகே உள்ள விவேகானந்தர் இல்லம், நடுக்குப்பம், மீன் சந்தை போன்ற பகுதிகளில் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

இவ்விசாரணை முடிந்த பின் இதன் அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கும். இக்கலவரம் சென்னையில் மட்டுமல்லாது மதுரை, கோவை, அலங்காநல்லூரிலும் நடைபெற்றது. அப்பகுதிகளிலும் விசாரணை நடைபெறும் என்று கூறினார் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை கலவரம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை துவங்கியது”

அதிகம் படித்தது