மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு



Mar 20, 2017

தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் தமிழத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது. குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தென்தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்தது.

siragu-rain2

இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிச்சி அடைந்துள்ளனர். மேலும் தற்போது வெப்பச்சலனம் காரணமாக வட மற்றும் தென் தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வட மற்றும் தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் வட கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிகழும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு”

அதிகம் படித்தது