மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை வானிலை ஆய்வு மையம்: தமிழக உள் மாவட்டங்களில் கோடை மழை



May 3, 2017

தமிழகத்தில் கோடைகால வெப்பநிலை அதிகமாகக் காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. தொடர்ந்து மார்ச் மாதத்திலிருந்து வெப்பநிலை அதிகமாகக் காணப்படுகிறது.

Siragu meteorological

கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை பதிவாகியிருந்தது. இந்நிலையில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் துவங்க இருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களாக கடல்காற்று வீசி வருவதால் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு உள் மாவட்டங்களில் கோடை மழை பெய்யும் எனவும், சென்னையைப் பொறுத்தவரை வறண்ட வானிலேயே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 107டிகிரி பாரன்ஹீட் கரூர் பரமத்தியில் பதிவாகியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை வானிலை ஆய்வு மையம்: தமிழக உள் மாவட்டங்களில் கோடை மழை”

அதிகம் படித்தது