மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை வானிலை ஆய்வு மையம்: குமரிக்கடலில் காற்றழுத்தம் உருவானதால் வடகிழக்குப் பருவமழை தீவிரம்



Nov 18, 2016

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 30ம் தேதி துவங்கியது. ஆனால் மழை மூன்று நாட்கள் மட்டுமே பெய்தது. வழக்கத்தைவிட 68 சதவிகிதம் குறைவான மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

siragu-rain3

குமரிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குமரிக்கடலில் காற்றழுத்தம் மையம் கொண்டுள்ளதால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி, ராமநாதபுரம், காரைக்கால், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் கனமழையும், தமிழகத்தின் இதர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். அடுத்த 2 நாட்களுக்கு தென் மாவட்ட கடலோரப் பகுதியில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது சென்னை வானிலை மையம்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை வானிலை ஆய்வு மையம்: குமரிக்கடலில் காற்றழுத்தம் உருவானதால் வடகிழக்குப் பருவமழை தீவிரம்”

அதிகம் படித்தது