மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை வானிலை ஆய்வு மையம்: தென் தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை



Mar 3, 2017

காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதி, முதுகுளத்தூரில் கனமழை பெய்தது.

Siragu rain

தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. திண்டுக்கல், மதுரை போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

உருவான காற்றழுத்த தாழ்வு நிலை சற்று நகர்ந்து இலங்கையை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடலின் அருகே நிலை கொண்டுள்ளது. இதனால் அடுத்த 3நாட்களுக்கு தென் தமிழக கடலோர பகுதிகளில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை வானிலை ஆய்வு மையம்: தென் தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை”

அதிகம் படித்தது