மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை வானிலை மையம்: தமிழத்தின் தென்கிழக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு



Dec 19, 2016

வங்கக்கடலில் உருவான வர்தா புயல் டிசம்பர் 12ம் தேதி சென்னையில் கரையை கடந்தது. இப்புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பெரும் சேதத்தை ஏற்படுத்திய வர்தா புயல் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி அரபிக்கடலில் லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டது.

siragu-heavy-rain

இந்நிலையில் வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் புதியதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் நகர்வைப் பொறுத்து மழை இருக்கும் எனவும், ஆனால் புயலுக்கு வாய்ப்பு இல்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்கிறது, மேலும் தமிழகத்தின் தென்கிழக்கு கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை வானிலை மையம்: தமிழத்தின் தென்கிழக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு”

அதிகம் படித்தது