மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜனவரி மாதம் முதல் ஆதார் அட்டை காண்பித்தால் மட்டுமே ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம்



Dec 8, 2016

ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க ரேஷன் கார்டுகளை “ஸ்மார்ட் கார்டு” வடிவில் 2017ல் வழங்கப்படுவதாக திட்டமிட்டிருந்தது. இதற்காக ரேஷன் கார்டுகளில் ஆதார் எண் மற்றும் அலைபேசி எண்களை இணைக்கும் பணி சென்ற செப்டம்பர் மாதம் முதல் நடந்து வருகிறது.

siragu-ration-shop

இதில் 70 சதவிகிதம் பேர் ஆதார் எண் மற்றும் அலைபேசி எண்களை இணைத்துள்ளனர். 30 சதவிகிதம் பேர் இணைக்கவில்லை. மாநில உணவு வழங்கல் துறை ஆணையர் அலுவலகம் ஆதார் எண்களை பதிவு செய்யாத அட்டையை கடந்த மாதம் 25ம் தேதி தற்காலிகமாக முடக்கி வைத்தது.

குடும்ப அட்டையில் உள்அட்டை இணைப்பு குறித்து எந்த அறிவிப்பும் அரசிடமிருந்து வராத நிலையில் ஜனவரி மாதம் முதல் ஆதார் எண், அலைபேசி எண் போன்றவற்றை இணைத்தவர்கள், ஆதார் அட்டை மற்றும் அலைபேசி எண்களைக் கொண்டு வந்தால் மட்டுமே ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகிக்கப்பட வேண்டும் என ஊழியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ரேஷன் கார்டில் ஆதார் எண் இணைக்கப்படாத வீடுகளுக்குச் சென்று ஆய்வுகள் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜனவரி மாதம் முதல் ஆதார் அட்டை காண்பித்தால் மட்டுமே ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம்”

அதிகம் படித்தது