மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜல்லிக்கட்டு சட்டத்தை ரத்து செய்யக்கோரி பீட்டா, விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் மனு



Jan 25, 2017

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் தீவிரமடைந்ததால் தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் பிறப்பித்து, பின் தமிழக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

siragu-jallikkattu3

இந்நிலையில் தமிழக அரசின் ஜல்லிக்கட்டுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டத்தை எதிர்த்து பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியம் இன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனுவை வரும் திங்கட்கிழமை(30.01.17) நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரிக்க உள்ளது.

இவ்வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த அரிமா சுந்தரம் விலங்குகள் நல வாரியத்தின் சார்பிலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி பீட்டாவுக்கு ஆதரவாகவும் ஆஜராக உள்ளனர்.

2016 ல் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக பிறப்பித்த அரசாணையை திரும்பப் பெறுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்துள்ளது மத்திய அரசு. இம்மனு வரும் திங்கட்கிழமையன்று(30.01.17) விசாரணை நடைபெற உள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜல்லிக்கட்டு சட்டத்தை ரத்து செய்யக்கோரி பீட்டா, விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் மனு”

அதிகம் படித்தது