மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க தமிழகத்தில் போராட்டம்



Jan 13, 2017

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள், கட்சித்தலைவர்கள் என ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

siragu-jallikattu

நிலுவையில் உள்ள ஜல்லிக்கட்டு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக வழக்கறிஞர்கள் ஜல்லிக்கட்டை பொங்கலுக்கு முன் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் பொங்கலுக்கு முன் தீர்ப்பு வழங்க முடியாது என்று கூறியது.

அதனால் தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மதுரை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி சென்னை மெரீனா கடற்கரையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கிலி ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை இருந்தது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க தமிழகத்தில் போராட்டம்”

அதிகம் படித்தது