மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜல்லிக்கட்டு வழக்கில் விசாரணை முடிந்தது: தீர்ப்பு ஒத்திவைப்பு



Dec 7, 2016

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவியது.

siragu-jallikattu

இதையடுத்து கடந்த 07.01.2016ல் ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில், வனத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கியது. இதனை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் நாரிமன் அடங்கிய குழு விசாரித்தது. மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமது வாதங்களை முன் வைத்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு வழக்கில் பாஜகவின் சுப்பிரமணிய சுவாமியும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாதாடினார். மத்திய அரசு, தமிழக அரசு, விலங்குகள் நல வாரியம் போன்றோர் தங்களது இறுதி வாதங்களை முன் வைத்தது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜல்லிக்கட்டு வழக்கில் விசாரணை முடிந்தது: தீர்ப்பு ஒத்திவைப்பு”

அதிகம் படித்தது