மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜல்லிக்கட்டை ஆதரித்து மதுரையில் கல்லூரி மாணவர்கள் பேரணி



Jan 10, 2017

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வர் நேற்றுதான் ஜல்லிக்கட்டு தொடர்பான கடிதத்தை பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார்.

siragu-jallikattu

இந்நிலையில் விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து மாணவர்கள், இளையஞர்கள் என பலர் போராடி வருகிறார்கள்.

இன்று மதுரை ஜெயஹிந்த்புரத்திலிருந்து சுப்ரமணியபுரம் நோக்கி மதுரையில் உள்ள கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து பேரணியை நடத்தியுள்ளனர். இப்பேரணியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை இல்லை என்ற அறிவிப்புக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேனர்களை கையிலேந்தி கோஷங்களை எழுப்பினர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜல்லிக்கட்டை ஆதரித்து மதுரையில் கல்லூரி மாணவர்கள் பேரணி”

அதிகம் படித்தது