மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அருண் ஜெட்லி, அமித்ஷா இருவரும் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க சென்னை வருகின்றனர்



Oct 12, 2016

 

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை விசாரிக்க மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா இருவரும் இன்று பிற்பகல் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

siragu-arun-jetly

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா கடந்த 22 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. இளையஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் முதல்வர் ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்தித்து வருகின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்துவருவதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் உடல்நிலை குணமாக வேண்டி அ.தி.மு.க தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அருண் ஜெட்லி, அமித்ஷா இருவரும் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க சென்னை வருகின்றனர்”

அதிகம் படித்தது