மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜெயலலிதாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது



Dec 7, 2016

உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்(05.12.2016) இரவு 11.30 மணியளவில் காலமானார். அவருடைய உடல் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சடங்குகள் முடிந்தவுடன் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது.

siragu-jayalalithaa2

நேற்று (06.12.2016) காலை 4.30 மணிமுதல் ஜெயலலிதாவின் உடலுக்கு லட்சக்கணக்கானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, கவர்னர் வித்தியாசாகர் ராவ், தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி, மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ், உத்திரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள கவர்னர் சதாசிவம், மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ்,முன்னாள் கவர்னர் ரோசைய்யா, எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின், சகாயம் ஐ.ஏ.எஸ், சீமான், வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள், நடிகர்கள் உட்பட லட்சக்கணக்கானோர் ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மாலை 4.30 மணிக்கு ஜெயலலிதாவின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு அருகில் மாலை 5.30 மணியளவில் அரசு முழு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜெயலலிதாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது”

அதிகம் படித்தது