மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவர்கள் பேட்டி



Feb 6, 2017

ஜெயலலிதா மறைந்து அறுபது நாட்களுக்குப் பிறகு, ஜெ., க்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியால் உள்ளிட்ட அப்பல்லோ மருத்துவர்கள் திடீரென இன்று(06.02.17)செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

Siragu-apollo-hospitals

கடந்த செப்டம்பர் 22ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு லண்டன், சிங்கப்பூர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார்.

ஜெ., மரணம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுப்பப்பட்ட நிலையில் இன்று திடீரென ஜெ., க்கு அளித்த சிகிச்சை குறித்து பேட்டியளித்துள்ளனர் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியால் உள்ளிட்ட அப்பல்லோ மருத்துவர்கள்.

அவரது சுயநினைவுடனே தேர்தல் ஆணையத்திற்கான கடிதத்தில் கைரேகை வைத்தார் என்றும், இவரது மரணத்தின்போது எழுப்பப்பட்ட கால்கள் எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, கால்கள் எடுக்கப்படவில்லை என்று பதில் அளித்தனர் மருத்துவர்கள்.

நீண்டகாலமாக மருத்துவமனையில் இருந்ததால் உடலை பதப்படுத்தப்பட்டது உண்மைதான் என்று மருத்துவர் சுதா சேஷய்யன் விளக்கம் அளித்துள்ளார். டிசம்பர் 5ம் தேதி 12.20மணியளவில் உடலை பதப்படுத்தப்பட்டது என்று கூறியுள்ளார்.

ஜெ., சிகிச்சை தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகளை ஏன் வெளியிடவில்லை என்ற கேள்விக்கு, ஜெயலலிதா அறையில் எந்த சிசிடிவி கேமராவும் இல்லை என்று பதிலளித்துள்ளார் மருத்துவர் ரிச்சர்ட் பியல்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவர்கள் பேட்டி”

அதிகம் படித்தது