மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜெயலலிதா குறித்து அதிமுக மூத்த நிர்வாகி பி.எச். பாண்டியன் பேட்டி



Feb 7, 2017

அதிமுக-வின் மூத்த நிர்வாகியும், முன்னாள் சபாநாயகருமான பி.எச்.பாண்டியன் மற்றும் அவரது மகன் மனோஜ் பாண்டியன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

Siragu p.h.pandiyan

பிப்ரவரி 24ல் ஜெயலலிதா பற்றியான செய்திகளை கூறலாம் என்று இருந்த நிலையில், சென்ற இரண்டு நாட்களில் நடந்த நிகழ்வுகளால் இன்று கூறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணத்திற்கு முன் 2011 டிசம்பர் மாதம் தலைமை செயலகத்தில் தன்னை சந்தித்து 45 நிமிடங்கள் பேசிய அவர், என்னை பதவியிலிருந்து நீக்க சதி நடப்பதாகவும், அந்த சதி கும்பலை வீட்டை விட்டு வெளியே அனுப்பப் போவதாகவும் தன்னிடம் தெரிவித்ததாக பி.எச்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பின் மார்ச் மாதத்திற்குப் பிறகு மன்னிப்பு கடிதம் கேட்டு உள்ளே வந்தார் சசிகலா. அதன் பிறகு ஒரு முறை என்னையையும் துக்ளக் ஆசிரியர் சோவை-யும் அழைத்து, இந்த கும்பல் தன்னை விஷம் கொடுத்து கொன்று விடுவார்கள் என்று பயமாக இருப்பதாகவும் ஜெயலலிதா எங்களிடம் கூறினார் என்று பி.எச்.பாண்டியன் கூறினார்.

ஜெயலலிதா மருத்துவமனை செல்லும் நாளன்று போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த வாக்குவாதம் காரணமாக மயக்கமடைந்தார். மயக்க நிலையிலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சென்று கேட்டதற்கு அம்மா நலமாக உள்ளார், வெகு விரைவில் குணமடைவார் என மெயகாப்பளர்கள் கூறினர். ஜெயலலிதா மறைவிற்குப் பின் பதப்படுத்துவதற்கு முன் அவரைப் பார்க்க வேண்டும் என்று கேட்டதற்கு மருத்துவ நிர்வாகம் என்னை அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா மரணமடைந்த பொழுது சசிகலா உட்பட யாரும் அழவில்லை என்று பி.எச்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜெயலலிதா குறித்து அதிமுக மூத்த நிர்வாகி பி.எச். பாண்டியன் பேட்டி”

அதிகம் படித்தது