மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜெ., மரணத்திற்கு நீதி விசாரணை கேட்டு ஓ.பி.எஸ் உண்ணாவிரதம்



Mar 8, 2017

ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை கேட்டு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இந்த உண்ணாவிரதப் போராட்டம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஓ.பி.எஸ். உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கியுள்ளார்.

Siragu panneerselvam

இப்போராட்டத்தில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், மதுசூதனன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் சென்னை உள்பட 36 இடங்களில் உண்ணாவிரதம் காலை 9 மணி முதலே நடைபெற்று வருகிறது. ஆவடியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

இந்த உண்ணாவிரத போராட்டம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதை வலியுத்தி நடைபெறுவதாக போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜெ., மரணத்திற்கு நீதி விசாரணை கேட்டு ஓ.பி.எஸ் உண்ணாவிரதம்”

அதிகம் படித்தது