மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ரூ.2000 வரை பரிவர்த்தனை செய்வோருக்கு சேவை வரி ரத்து



Dec 8, 2016

நவம்பர் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நடவடிக்கை கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிப்பதற்காகவும் எடுக்கப்பட்டது என்று கூறினார்.

siragu-debit-card

இதனையடுத்து மின்னணு பரிவர்த்தனையை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ரூ.2000 வரை பரிவர்த்தனை செய்வோருக்கு சேவை வரி ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ரொக்கமற்ற பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் எடுக்கப்பட்டது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கான பரிவர்த்தனைக்கு 15 சதவிகிதம் வசூலிக்கப்பட்டது. அனைவரும் டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு மாற வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ரூ.2000 வரை பரிவர்த்தனை செய்வோருக்கு சேவை வரி ரத்து”

அதிகம் படித்தது