மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

டெல்லியில் தமிழக விவசாயிகள் மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு



Mar 28, 2017

பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 15-வது நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu-farmers5

எலிக்கறி சாப்பிட்டும், சாலையில் உருண்டும் என பல்வேறு வடிவங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் தமிழக விவசாயிகள் சந்தித்தனர். சந்திப்பில் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும் மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்கை இன்று(28.03.17) மாலை 4 மணியளவில் தமிழக விவசாயிகள் சந்திக்க உள்ளனர். இந்நிலையில் இன்று(28.03.17) மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை டெல்லியில் கூட உள்ளது. இக்கூட்டத்தில் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டெல்லியில் தமிழக விவசாயிகள் மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு”

அதிகம் படித்தது