மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

டெல்லியில் தமிழக விவசாயிகள் 36-வது நாளாக நூதன முறையில் போராட்டம்



Apr 18, 2017

பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த மாதம் 14ம் தேதி முதல் 36 நாட்களாக பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu-farmers

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் அரசியல் கட்சிகள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள் தங்களது போராட்டத்தை எலிக்கறி தின்பது, பாம்புக்கறி தின்பது, மண்டை ஓட்டை கையில் ஏந்துவது, சேலை அணிந்து என பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இப்போராட்டத்திற்கு இதுவரை மத்திய மாநில அரசுகள் வாய் திறக்காமல் இருந்து வருகிறது. போராட்டத்தின் 36-வது நாளான இன்று(18.04.17)மோடி போல் வேடமிட்ட ஒருவர் போராடும் விவசாயிகளை சாட்டையால் அடிப்பது போன்று நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டெல்லியில் தமிழக விவசாயிகள் 36-வது நாளாக நூதன முறையில் போராட்டம்”

அதிகம் படித்தது