மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்தை



Apr 19, 2017

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 37 நாட்களாக பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவிவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu tamil farmers

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தினமும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் தமிழக விவசாயிகள். அவ்வகையில் எலிக்கறி தின்றும், பாம்புக்கறிதின்றும், மண்சோறு சாப்பிடுதல், கைகளில் எலும்புக்கூடு ஏந்துதல் என்று பல்வேறு வடிவங்களில் போராடி வருகிறார்கள்.

அவ்வகையில் 37 வது நாளான இன்று(19.04.17) மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இப்போராட்டத்தில் விவசாயிகள் தங்கள் சட்டைகளை கிழித்துக் கொண்டு சாலையில் ஓடுவது போன்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

37 நாட்கள் போராட்டம் நடத்தியும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. எனவே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சக விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

ஒரு மாதமாக போராட்டம் நடத்தும் சக விவசாயிகளின் மன நிலையை அறிய அய்யாக்கண்ணு கருத்து கேட்டு வருகிறார். சக விவசாயிகளிடம் ஆலோசனை நடத்திய பின் போராட்டத்தைத் தொடரலாமா அல்லது முடித்துக் கொள்ளலாமா என்று அறிவிக்கப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்தை”

அதிகம் படித்தது