மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் தற்காலிக வாபஸ்



Apr 20, 2017

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 37 நாட்களாக பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu-farmers

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தினமும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் தமிழக விவசாயிகள்.

ஒரு மாதமாக போராட்டம் நடத்தும் சக விவசாயிகளின் மன நிலையை அறிய அய்யாக்கண்ணு கருத்து கேட்டார். சக விவசாயிகளிடம் ஆலோசனை நடத்திய பின் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசினார் அய்யாக்கண்ணு.

ஏப்ரல் 22க்குள் அமைச்சரிடமிருந்து உறுதிமொழி கடிதம் கிடைத்தால் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும், இல்லையென்றால் எங்களது போராட்டம் தீவிரமடையும் என்றும் அமைச்சர் சந்திப்பிற்குப் பின் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் தற்காலிக வாபஸ்”

அதிகம் படித்தது