மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் வாபஸ்



Mar 21, 2017

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து டெல்லி ஜந்தர் மாந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தார்கள்.

Siragu-farmers

இந்தப் போராட்டம் ஏழு நாட்களாக நடைபெற்று வந்த இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.

திமுக எம்.பிக்களான கனிமொழி, திருச்சி சிவா போன்றோர் போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை விவசாயிகளை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப் பின் டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

மத்திய வேளாண் துறை அமைச்சரை சந்திக்க நேரம் பெற்றுத் தருவதாக தமிழக விவசாயிகளுக்கு உறுதி அளித்தார் பொன்.ராதாகிருஷ்ணன்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் வாபஸ்”

அதிகம் படித்தது