மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக ஜெர்மனி தமிழ்ச் சங்கம் போராட்டம்



Apr 10, 2017

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 28நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu-farmers

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் ஜெர்மனில் வசித்து வரும் தமிழர்கள், டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிராங்பர்ட் நகரத்தின் மையப் பகுதியில் தமிழ்ச் சங்கம் சார்பில் பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என இளைஞர்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

விவசாயிகளின் போராட்டம் குறித்து ஜெர்மனியில் உள்ள தமிழர்களின் கையெழுத்திட்ட மனுவை ஜெர்மனி பிரதமரிடம் வழங்க முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து எங்களது ஆதரவு விவசாயிகளுக்கு இருக்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக ஜெர்மனி தமிழ்ச் சங்கம் போராட்டம்”

அதிகம் படித்தது