மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

டெல்லியில் விரலில் மை வைக்கும் பணி துவங்கியது



Nov 16, 2016

நவம்பர் 8ம் தேதியன்று பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து, மக்கள் தாங்கள் வைத்திருக்கும் பணத்தை மாற்றி வருகின்றனர். இதனை பயன்படுத்தி கறுப்பு பணம் வைத்திருப்போரும் பலமுறை மாற்றுவதாக தகவல்கள் வெளியானது. இதனைத் தடுக்கும் வகையில் பணத்தை மாற்றுவோர் விரலில் மை வைக்கப்படும் என நேற்று அறிவித்திருந்தது.

siragu-rupees

டெல்லி, பஞ்சாப் போன்ற வடமாநிலங்களில் இன்று மை வைக்கும் பணி துவங்கியது. இம்முறையில் பணம் வாங்குவதற்கு முன்பே விரலில் மை இடப்படுகிறது. இந்த மை இடது ஆள்காட்டி விரலில் வைக்கப்படுகிறது. தற்போது தேர்தல் நடைபெறும் இடங்களில் வலது ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் என அறிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டெல்லியில் விரலில் மை வைக்கும் பணி துவங்கியது”

அதிகம் படித்தது