மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

டெல்லியில் 14- வது நாட்களாக நடைபெறும் தமிழக விவசாயிகளின் போராட்டம்



Mar 27, 2017

தமிழகத்தில் தற்போது கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

Siragu-farmers

பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மாந்தர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் 14 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தமிழக விவசாயிகள் போராட்டத்தை பல வடிவங்களில் நடத்தி வருகிறார்கள். அவ்வகையில் 14வது நாளான இன்று(27.03.17) பச்சை எலிக்கறியைத் தின்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளுக்கு பஞ்சாப், உத்திரப்பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழர்களின் இப்போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டெல்லியில் 14- வது நாட்களாக நடைபெறும் தமிழக விவசாயிகளின் போராட்டம்”

அதிகம் படித்தது