மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

டெல்லியில் 16 நாட்களாகப் போராடும் தமிழக விவசாயிகள்: ஒரு விவசாயி உண்ணாவிரதம்



Mar 29, 2017

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு 250 விவசாயிகள் மரணமடைந்துள்ளனர். எனவே பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu tamil farmers

தேசிய தென்னிந்தியா நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். எலிக்கறி தின்னும் போராட்டம் உட்பட பல்வேறு வடிவங்களில் இப்போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் போராட்டத்தின் 16-ஆவது நாளான இன்று விவசாயி ஒருவர், கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்திருக்கிறார். வயதான அவர் போராடும் களத்தில் மேல் சட்டை இல்லாமல் கடும் வெயிலில் சாலையில் படுத்து உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருகிறார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டெல்லியில் 16 நாட்களாகப் போராடும் தமிழக விவசாயிகள்: ஒரு விவசாயி உண்ணாவிரதம்”

அதிகம் படித்தது