மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

டெல்லியில் 26வது நாளாக நடைபெறும் விவசாயிகள் போராட்டம்



Apr 8, 2017

காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu farmer

ஒவ்வொரு நாளும் பல்வேறு வடிவங்களில் நடத்தும் இப்போராட்டம் இன்று (08.04.17)மொட்டை அடித்து வெயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நேற்று(07.04.17) விவசாயிகள் தங்களது கைகளை அறுத்து இரத்தம் சொட்ட சொட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நேற்று(07.04.17) ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

இப்போராட்டத்தில் சிலர் உண்ணாவிரதமும் இருந்து வருகிறார்கள். இவர்களில் இருவர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டெல்லியில் 26வது நாளாக நடைபெறும் விவசாயிகள் போராட்டம்”

அதிகம் படித்தது