மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தனியார் குடிநீர் லாரி ஓட்டுநர்கள் 3 நாள் வேலை நிறுத்தம்



Mar 8, 2017

சென்னை புறநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், நட்சத்திர விடுதிகளுக்கு தனியார் லாரிகளின் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தனியார் லாரிகள் காஞ்சிபுரம் மாவட்டம் பொன்மார், மாம்பாக்கம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுத்து விநியோகித்து வருகிறது.

Siragu water-lorry

ஆனால் தனியார் குடிநீர் லாரிகள் கிணறுகளிலிருந்து 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொண்டு ரூ.150 முதல் ரூ.200 வரையே கொடுத்துவிட்டு, நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் வரை விற்பனை செய்கிறார்கள் என்று புகார் எழுந்ததுள்ளது.

இவ்வாறாக சட்டத்திற்கு விரோதமாக தண்ணீர் எடுப்பதாகக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் குடிநீர் லாரிகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

இதையடுத்து மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தனியார் லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தால் தென் சென்னை பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தனியார் குடிநீர் லாரி ஓட்டுநர்கள் 3 நாள் வேலை நிறுத்தம்”

அதிகம் படித்தது