மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தனியார் பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த நீதிபதி தலைமையில் குழு



Nov 15, 2016

தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதால் மக்கள் பெரும் பாதிப்படைகின்றனர். எனவே தனியார் பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளர் இளங்கோவன் என்பவர் மனு அளித்துள்ளார்.

siragu-madurai-highcourt

இவ்வழக்கை மதுரை கிளை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, நீதிபதி தலைமையில் குழு அமைத்து தனியார் பேருந்து கட்டணத்தை முறைபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இத்தீர்ப்பை அடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி பாட்ஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் போக்குவரத்துத்துறை இயக்குனர், ஆணையர், நிதித்துறை இணை செயலாளர் ஆகியோர் உள்ளனர்.

இக்குழு 7 நாட்களில் பணிகளைத் துவங்கி நான்கு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அறிக்கை கிடைத்தவுடன் 12 வாரங்களில் தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தனியார் பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த நீதிபதி தலைமையில் குழு”

அதிகம் படித்தது