மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்தின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி சாந்தா ஷீலா நாயர் ராஜினாமா



Feb 7, 2017

மறைந்த ஜெயலலிதா-வால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக ராஜினாமா செய்து வருகிறார்கள். அவ்வரிசையில் தமிழகத்தின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி சாந்தா ஷீலா நாயர் சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார்.

siragu Shanthaa sheela

ஐஏஎஸ் அதிகாரியான சாந்தா ஷீலா நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக 2016 ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியாற்றி வருகிறார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர் 1973ம் ஆண்டு தமிழக பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியாவார். திண்டுக்கல் உதவி ஆட்சியராகவும், திருச்சி மாவட்ட ஆட்சியராகவும் சிறப்பாக பணியாற்றினார்.

தமிழகத்தின் முக்கியமான துறைகளில் செயலாளராக இருந்த இவர், தமிழக அரசின் உள்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர்கள், சென்னை பெருநகர குடிநீர் வாரிய தலைவர் போன்ற பல பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

ஜெயலலிதா-வால் நியமிக்கப்பட்ட சாந்தா ஷீலா நாயர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி சாந்தா ஷீலா நாயர் ராஜினாமா”

அதிகம் படித்தது