மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியைத் தாண்டியது



Apr 11, 2017

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலிருந்தே தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. 15 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 105 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது. ஆங்காங்கே நெடுஞ்சாலைகளில் கானல் நீர் காணப்படுகிறது.

Siragu meteorological

நேற்று(10.04.17) அதிகபட்சமாக கரூரில் 109 டிகிரி பதிவாகியுள்ளது. இன்றும் பல மாவட்டங்களில் 100 டிகிரி வெப்பநிலையைத் தாண்டியுள்ளது.

இன்று(10.04.17) கரூரில் 106 டிகிரியும், நாமக்கல் மற்றும் வேலூரில் 105 டிகிரியும், ஈரோடில் 104 டிகிரியும், திருப்பூரில் 99 டிகிரியும், காஞ்சிபுரத்தில் 103 டிகிரியும், திருவள்ளூரில் 102 டிகிரியும், சென்னையில் 95 டிகிரியும் பதிவாகியுள்ளது.

கடற்பரப்பில் வெப்பம் அதிகரித்து வருவதால், வங்கக்கடல் ஒட்டியுள்ள நிலப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெப்பநிலை அதிகரித்துள்ளதால் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியைத் தாண்டியது”

அதிகம் படித்தது