மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்தில் இரு தினங்களுக்கு வெப்பக்காற்று அதிகரிக்கும்



Apr 17, 2017

ஏப்ரல் மாதத்தொடக்கத்திலிருந்தே தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. 15 க்கும்மேற்பட்ட மாவட்டங்களில் 100டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது.ஆங்காங்கேநெடுஞ்சாலைகளில் கானல் நீர் காணப்படுகிறது.

Siragu meteorological

காற்றின் ஈரப்பதம் குறைந்துவிட்டதன் காரணமாக வெயிலின் அளவு அதிகரித்துள்ளது. அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெப்பக்காற்று வீசிவருகிறது.

இன்று(17.04.17) காலை முதலே தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வெயில் அதிகமாகக்காணப்படுகிறது. வெப்பநிலையாக மதுரை, திருச்சி, கரூர், சென்னை மீனம்பாக்கத்தில் 107டிகிரிபதிவாகியுள்ளது. இதனையடுத்து நெல்லை, வேலூர், ஈரோடு திருவண்ணாமலையில் 106 டிகிரி வெப்பநிலைபதிவாகியுள்ளது.

தஞ்சாவூரில் 105டிகிரி, திண்டுக்கலில் 104 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.மேலும் இரண்டு நாட்களுக்கு வழக்கத்தை விட அதிகமான வெப்பம்காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தில் இரு தினங்களுக்கு வெப்பக்காற்று அதிகரிக்கும்”

அதிகம் படித்தது