மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டியது



Apr 13, 2017

ஏப்ரல்மாதத் தொடக்கத்திலிருந்தே தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. 15 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது.ஆங்காங்கே நெடுஞ்சாலைகளில் கானல் நீர் காணப்படுகிறது.

Siragu meteorological

இன்று(13.04.17) காலை முதலே தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வெயில் அதிகமாகக் காணப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலையாக திருவள்ளூரில் 108 டிகிரி பதிவாகியுள்ளது. இதனையடுத்து நாமக்கலில் 106 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மதுரை, திருச்சி, தஞ்சை போன்ற நகரங்களில் 102 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. கரூரில் 94 டிகிரியும், சென்னையில் 95 டிகிரியும் பதிவாகியுள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வழக்கத்தை விட அதிகமான வெப்பம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், மே மாதத்தில் கோடை மழையை எதிர்பார்க்கலாம் என்றும் சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டியது”

அதிகம் படித்தது