மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று துவங்கியது



Oct 31, 2016

தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை துவங்கியது. வடக்கு, தென் மற்றும் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

siragu-rain

அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம். அக்டோபர் 30ந்தேதியன்று பருவமழை துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததையடுத்து நேற்று முதல் மழை பரவலாக பெய்து வருகிறது.

மழை காரணமாக தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் உள்ள கண்மாய் உடைந்து தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்ததால் கால்நடைகள் பல பலியாயின.

கோவை மாவட்டத்தின் 15 கிராமங்களில் சூறைக்காற்று வீசியது. இதனால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சாய்ந்தன.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவைவிட 10 சதவிகிதம் குறைவாகவே பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று துவங்கியது”

அதிகம் படித்தது