மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக அரசு: தேர்வு கண்காணிப்பு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஊதிய உயர்வு



Apr 28, 2017

தேர்வு கண்காணிப்பு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவோருக்கு உழைப்பூதியம் மற்றும் ஊதிய உயர்வு அளித்துள்ளது தமிழக அரசு. இதன் காரணமாக ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Siragu paper correction

அதன்படி பிளஸ் 2 தேர்வுப் பணியில் ஈடுபடும் தலைமை கண்காணிப்பாளருக்கு கொடுக்கப்பட்ட மதிப்பூதியம் ரூ. 115 லிருந்து ரூ. 133 எனவும், கூடுதல் துறை அலுவலர் மற்றும் துறை அலுவலர்க்கு ரூ. 80 லிருந்து ரூ. 92 ஆகவும், விடைத்தாள் கட்டுப்பாட்டாளருக்கு ரூ. 69 லிருந்து ரூ. 80ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆசிரியர்க்கு பிளஸ் 2தாள் ஒன்றுக்கு உழைப்பூதியம் ரூ. 7.50 லிருந்து ரூ. 10 எனவும் உயர்த்தப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி தேர்வுப் பணியில் ஈடுபடும் தலைமை கண்காணிப்பாளருக்கு மதிப்பூதியம் ரூ. 92 லிருந்து ரூ. 106 எனவும், கூடுதல் துறை அலுவலர் மற்றும் துறை அலுவலர்க்கு ரூ. 57 லிருந்து ரூ.66 எனவும், விடைத்தால் கட்டுப்பாட்டாளருக்கு ரூ. 46 லிருந்து ரூ. 53 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆசிரியர்க்கு எஸ்.எஸ்.எல்.சிதாள் ஒன்றுக்கு உழைப்பூதியம் ரூ. 6 லிருந்து ரூ. 8 எனவும் உயர்த்தப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக அரசு: தேர்வு கண்காணிப்பு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஊதிய உயர்வு”

அதிகம் படித்தது